சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த பெட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சட்ட விரோதமாக சிலிண்டரை கொண்டு வந்து ரயில் பெட்டியில் சமைத்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.