9 உயிர்களை பலி வாங்கிய மதுரை சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்து; நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்…

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  மதுரை ரயில் நிலையம் அருகே…

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் இருந்த ரயில் பெட்டியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தீ விபத்து குறித்து அதிகாலை 5.15 மணிக்கு தகவல் கிடைத்தது. ரயிலின் தனியார் பெட்டியில் சட்டவிரோத சிலிண்டர்களை பயணிகள் ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிந்தது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மற்ற பெட்டிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் உ.பி.யில் வசிப்பவர்கள். சீதாபூரைச் சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்சி இந்தப் பெட்டியை முன்பதிவு செய்திருந்தது. இந்த தனியார் ரயில் பெட்டியில் மொத்தம் 55 பேர் பயணம் செய்தனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

விபத்து குறித்து, தெற்கு ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குக்னேசன் கூறுகையில், பயணிகள் பெட்டியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டதாகவும்  இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

ரயில் எண் 16730 புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் மதுரை ரயில் நிலையத்தை அதிகாலை 3.47 மணிக்கு வந்தடைந்ததாக கூறப்படுகிறது. இதில் வந்த பயணிகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வழியாக, சென்னை-எழும்பூர்-அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16824) மூலம் லக்னோவுக்குச் செல்ல பயணிகள் திட்டமிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.