புது பொலிவுடன் மாற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம்; மகிழ்ச்சியில் பக்தர்கள்

மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென முடங்கி பின் மீண்டும் கோவில் நிர்வாகம் இணைய தளத்தை மேம்படுத்தி புது பொலிவுடன் தமிழில் மாற்றி உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற…

மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென முடங்கி பின் மீண்டும் கோவில் நிர்வாகம் இணைய தளத்தை மேம்படுத்தி புது பொலிவுடன் தமிழில் மாற்றி உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். கோயில் திருவிழாக்கள், கோவில் நடை திறக்கும் நேரங்கள், கோவிலின் வரலாறு, கோவிலின் சிறப்பு, சிறப்புக் கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருந்தன

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாகப் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வந்த http://www.meenakshitemple.org அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென முடங்கி பின் மீண்டும்
செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் இணையதளம் முடங்கியதால் வெளி மாநிலம்,வெளி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.


மேலும் இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் தமிழில் மாற்ற வேண்டும் எனப் பக்தர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கோவில் இணையத்தை மேம்படுத்தி புது பொலிவுடன் மாற்றி உள்ளது.
கோவில் இணையதளம் முழுமையாகத் தமிழிலும் மீனாட்சி அம்மன் கோவிலின் பூஜைகள், வழிபாட்டு முறைகள், வரலாறுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது மட்டுமில்லாமல் மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவில்கள் பற்றிய விவரங்களும் கோவிலில் 12 மாதங்களும் நடைபெறும் திருவிழா பற்றிய விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பக்தர்கள் மகிழ்ச்சியும்,வரவேற்பும்
தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.