உலகக் கோப்பை: இலங்கைக்கு ஷாக் கொடுத்த நமீபியா

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் மினோவ்ஸ் நமீபியா 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது. 2022 டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டத்தில்…

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் மினோவ்ஸ் நமீபியா 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது.

2022 டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியது. இந்த உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் கேப்டன் தசுன் ஷனக டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

நமீபியா சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. 14.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து நமீபியா கடும் நெருக்கடியில் சிக்கியது. ஜான் ஃப்ரைலின்க் , ஜேஜே ஸ்மித் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் ஒரு மேட்ச்-வின்னிங் என நிரூபிக்கப்பட்டது.

இந்த 163 என்ற இலக்கை அடைய களம் இறங்கிய இலங்கைக்கு, மோசமான ஆட்டத்தை தொடங்கியது. நமீபியா அணியின் அசத்தலான பந்துவீசிக்கு இலங்கை அணியால் சமாலிக்க முடியானல் தினரியது. ஸ்மித்தும் சிறப்பாக பந்துவீசி பேட்டிங் செய்தார்.

அதே நேரத்தில் ஷிகோங்கோ இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்டிங் வரிசையை உடைத்தார். 3.3 ஓவரில் பதும் நிஸ்ஸங்க (9), குசல் மெண்டிஸ் (6), தனுஷ்க குணதிலக (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதன் படி நமீபியா பந்துவீச்சாளர்கள் 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.