மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகளில் முதல் இரண்டு இடங்களை மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த கைதிகள் பிடித்துள்ளனர்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளிலும் உள்ள கைதிகள் பலரும் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் 10ம் வகுப்பு தேர்வில் சிறை கைதிகள் அளவில் முதல் இரண்டு இடங்களை மதுரை மத்திய சிறையை சேர்ந்த கைதிகள் பிடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த சிறையில் இருக்கும் அலெக்ஸ் பாண்டியன் 10 வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 428 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மதுரை சிறைக் கைதி ஆரோக்கிய ஜெயா 426 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார்.புழல் சிறையை சேர்ந்த ரமேஷ் என்கிற கைதி 421 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் சிறை கைதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் 33 கைதிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் 20 கைதிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினர், அவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10, 12ம் வகுப்பு தேர்வில் கோவை மத்திய சிறை 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.