மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா..!

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்துள்ளார்.

அண்மையில் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில், மேயர் இந்திராணி பொன்வசந்தின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் துணை மேயர் தலைமையில் இந்திராணி பொன்வசந்தின் ராஜினாமை ஏற்பது தொடர்பான அவசர கூட்டம்  நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.