முக்கியச் செய்திகள் தமிழகம்

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது, என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 425 பேர், 2 ஆயிரம் லாரிகள் மூலம், சென்னை மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் சப்ளை செய்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

சாகுபடிக்கு பயன்படுத்தப்படாத விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் போது, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாக கூறி அதிகாரிகள், தங்கள் உறுப்பினர்களை துன்புறுத்துவதாகவும் மனுவில் குறிபிடப்பட்டிருக்கிறது. தங்கள் சங்க உறுப்பினர்களின் தண்ணீர் லாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தண்ணீர் எடுக்கவும், கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களை பெற்ற லாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார். அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், என உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்தனர். அதேசமயம், உரிய ஒப்புதல்களை பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள், அதற்கான ஆதாரங்களுடன் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி கோரி, அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement:

Related posts

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

Jeba

சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

Gayathri Venkatesan

பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்!

Karthick