ஒடிசாவில் கிணற்றில் விழுந்த குட்டி யானை, பெரும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
ஒடிசாவில் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிசுசோலா என்ற கிராமத்தில், மூடப்படாமல் இருந்த பயன்படுத்தப்படாத கிணற்றில், குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது.
15 அடி ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட கிணற்றில் விழுந்ததால், யானையை மீட்க பல மணி நேரமாக, அம்மாநில வனத்துறையினர், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து போராடினர்.
இதனையடுத்து குட்டி யானையை, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பத்திரமாக மீட்டனர். மேற்கு வங்க எல்லையைக் கடந்து, ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இந்த கிராமத்தை யானைகள் கடந்து செல்வது வழக்கம், என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.







