சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படமும் தனுஷ் நடிப்பில் உருவான அட்ராங்கி ரே திரைப்படமும் வரும் 24ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் உருவான திரைப்படம் ‘அட்ராங்கி ரே’. படத்தின் இயக்குநருக்கு முந்தைய படமான ‘ராஞ்சனா’ வெற்றிப்படமாக இணைந்தது. அதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகளவில் எழுந்துள்ளது. மேலும், தனுஷ் இந்த படத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது. இந்தப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அட்ராங்கி ரே’ திரைப்படமும், சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படமும் வரும் 24ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தனுஷ், சிம்பு ரசிகர்கள் இப்போதே இணையத்தின் தங்களது சண்டைய துவக்கிவிட்டனர்.







