M.G.R. திரைப்படப் பயிற்சி நிறுவனம்: இளங்கலை காட்சிக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு…!

தமிழ் நாடு அரசு M.G.R. திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமானது மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்குகிறது. இந்த நிறுவனம் திரைத்துறை சார்ந்த படிப்புகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமானது 2026 -27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் 2 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில்,

“தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில், ஆறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (www.filminstitute.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் 12.05.2026 முதல் 21.06.2026 மாலை 5.00 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கீழ்க்காணும் இரண்டு பாடப்பிரிவுகளுக்கு மட்டும், நிர்வாக காரணங்களுக்காக 27.06.2026 மாலை 05.00 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என்பது இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

  1. இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) – Bachelor of Visual Arts (Digital Intermediate)
  2. இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) – Bachelor of Visual Arts (Audiography)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.