சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் – அமைச்சர் தகவல்

  சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார்.   சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜூன் மாதத்தில்,…

 

சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார்.

 

சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜூன் மாதத்தில், சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும் வகையில் 2 நாள் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் தொடங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

 

தனியார் சொகுசு கப்பல் மூலம் நடைபெறவுள்ள சுற்றுலா திட்டத்திற்கு சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்த அவர்,கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்தார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.