தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வரும் 28ம் தேதி உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.
அதன்படி 28-ம் தேதி காலை 11 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றிய பகுதிகளில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 தொடரில் “Slow over rate” விதியால் அபராதம் செலுத்திய கேப்டன்கள்! RCB-க்கு இதிலும் சோதனையா?
தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







