டாஸ் வென்ற லக்னோ அணி – சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. எனவே சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது. 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை…

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. எனவே சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், 34வது லீக் போட்டி லக்னோ உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக ஆறு ஆட்டங்கள் விளையாடி உள்ளது. அதில் நான்கு ஆட்டத்தில் வெற்றியும், இரண்டு ஆட்டத்தில் தோல்வியும் கண்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆறு ஆட்டங்கள் விளையாடி உள்ளது. அதில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்களில் தோல்வியும் கண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.