#LubberPandhu ஓடிடி வெளியீடு திடீர் ஒத்திவைப்பு! ஏன் தெரியுமா?

லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. கடந்த செப்.20ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே…

#LubberPandhu OTD release postponed!

லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. கடந்த செப்.20ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜா பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் தனி ரசிகர்களையும் பெற்றது.

ரூ.8 கோடி தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தாண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

இப்படம் நாளை சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், இப்படம் இன்னும் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்று வருவதால், இதன் ஓடிடி தேதியை ஒத்திவைப்பதாகவும், விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாகவும் சிம்பிளி சௌத் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.