எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைந்தது!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.   எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. இதுபோலவே பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது.…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. இதுபோலவே பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  “எல்பிஜி சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 819 ரூபாய்க்கு விற்பனையாகும் எல்பிஜி சிலிண்டர் இனி 809 ரூபாய்க்கு விற்பனையாகும். இந்த விலை குறைப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

ஐரோப்பா மற்றும் ஆசியப் பகுதிகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததன் காரணமாக கடந்த  வரை கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளது. இதன் பின்னணியில்தான் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.