வங்கி சேமிப்பு உள்பட வைப்பு நிதிகளுக்கான வட்டியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளின் சேமிப்பு கணக்குகளுக்கான வருடாந்திர வட்டி 4 லிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி 7.1 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல ஒரு வருட வைப்புத் தொகைக்கான வட்டி 5.5 லிருந்து 4.4 சதவிகிதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 7.4 லிருந்து 6.5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி 6.9 லிருந்து 6.2 சதவிகிதமாகவும், தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கு 6.8லிருந்து 5.9 ஆகவும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான (செல்வமகள் சேமிப்பு திட்டம் ) வட்டி 7.6 சதவிகிதத்தில் இருந்து 6.9 சதவிகிதமாக குறைந்துள்ளது.