வங்கக் கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – #IMD எச்சரிக்கை!

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்.2 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்,…

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்.2 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி, சென்னையில் இன்று காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

அதனுடன், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - News7 Tamil

இந்த நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாள் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கரையோரம்  நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.