முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

3 ஆயிரத்தும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,33,966 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,904 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 11,154 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 33,48,419 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 47,643 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 7,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 6,492 பேருக்கும், செங்கல்பட்டில் 4,224 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

10 பொருட்களுக்கு புவி சார் குறியீடு பெற திட்டம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Jayasheeba

’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’

G SaravanaKumar

ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து

G SaravanaKumar