இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,058 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 3,40,94,373ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19,470 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,34,58,801 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 164 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,52,454 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் 1 லட்சத்து 83 ஆயிரத்து 118 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 227 நாட்களில் பதிவான எண்ணிக்கையை விட குறைவாகும். இதுவரை 98 கோடியே 67 லட்சத்து 69 ஆயிரத்து 411 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட கடந்த 24 மணி நேரத்திய கொரோனா பாதிப்பில் 6,676 பேர் கேரளாவை சேர்ந்தவர்களாவார்கள். மொத்த உயிரிழப்பில் 60 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








