கள்ளக்குறிச்சியில் காதலர்கள் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி அருகே, வீட்டிலிருந்து மாயமான காதலர்கள் ஆற்றங்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு…

கள்ளக்குறிச்சி அருகே, வீட்டிலிருந்து மாயமான காதலர்கள் ஆற்றங்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சோமண்டார்குடி ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி மாணவரின் சடலமும், ஆற்றில் மிதந்தபடி மாணவியின் சடலமும் இருந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார், இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரும் உயிரை மாய்த்துக்  கொண்டார்களா, அல்லது கொலையா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.