கல்யாணம் செய்ய மறுத்த காதலன்: காதலி வைத்த செக்…!

கள்ளக்குறிச்சி அருகே கல்யாணம் செய்ய மறுத்த காதலன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து காதலனை காதலி கரம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள தாவடிபட்டு கிராமத்தை சேர்ந்தவர்…

கள்ளக்குறிச்சி அருகே கல்யாணம் செய்ய மறுத்த காதலன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து காதலனை காதலி கரம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள தாவடிபட்டு கிராமத்தை
சேர்ந்தவர் பெரியசாமி என்பவரது மகன் ரஞ்சித். இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ரவி எம்பவரது மகள் கமலி என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரஞ்சித் காதலித்த காதலியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறபடுக்கிறது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலி கமலி புகார் அளித்தார்.

காதலியின் புகாரையடுத்து ரஞ்சித் காவல் நிலைத்தில் ஆஜரானார். காதலியை கல்யாணம் செய்வதில் என்ன பிரச்னை என்று போலீசார் கேட்டனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் ரஞ்சித்திடம் அவரின் காதலி கமலியை கரம் பிடித்து கொள்ள உத்தரவிட்டார்.

பின்னர் கள்ளக்குறிச்சி வாட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காரியசித்தி விநாயகர் ஆலையத்தில் எளிமையான முறையில் காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். காதலித்து கரம் பிடிக்க மறுத்த காதலனை காவல் நிலையம் சென்று கரம்
பிடித்த நிகழ்வு அரங்கேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.