#LosAngeles | மறைந்த ‘FRIENDS’ நடிகர் Matthew Perry சடலமாகக் கிடந்த வீட்டை வாங்கிய இந்திய வம்சாவளி பெண்!

அனிதா லல்லியன் என்ற இந்திய வம்சாவளிப் பெண், லாஸ் ஏஞ்சஸ்ஸில் உள்ள ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மிகப் பெரிய பங்களாவை வாங்கியுள்ளார். நடிகர் மேத்யூ பெர்ரி லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வீட்டில்தான் சடலமாகக்…

#LosAngeles | Indian-origin woman buys house where late 'FRIENDS' actor Matthew Perry's body was found!

அனிதா லல்லியன் என்ற இந்திய வம்சாவளிப் பெண், லாஸ் ஏஞ்சஸ்ஸில் உள்ள ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மிகப் பெரிய பங்களாவை வாங்கியுள்ளார்.

நடிகர் மேத்யூ பெர்ரி லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வீட்டில்தான் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வீட்டை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவரும், திரைப்பட தயாரிப்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா லல்லியன் 8.55 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். வீட்டில் குடிபுகுவதற்கு முன்பு, மேத்யூவின் ஆன்மா சாந்தியடைய ஒரு பூஜையையும் நடத்தி முடித்திருக்கிறார் லல்லியன்.

லல்லியன் இது குறித்து கூறுகையில், “இந்த பங்களாவின் மிக ரம்மியமான அமைப்பும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பசிபிக் கடற்கரையின் அழகும் என்னை அதிசயிக்க வைக்கிறது. அதேவேளையில், மறைந்த நடிகரின் ஆத்மா சாந்தியடையவும் பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பங்களாவின் அழகில் மயங்கியதால்தான், வீட்டின் பின்னணியைப் பற்றி கவலைப்படவில்லை. வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு, சில குறிப்பிட்ட பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டிலிருந்து பார்த்தால் பசிபிக் பெருங்கடலின் அழகிய தோற்றம் தெரிகிறது. இது என்னை வெகுவாக மயக்கியிருக்கிறது. ஒரு ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவராக நான் ஒன்றை நம்புகிறேன். ஒவ்வொரு சொத்துக்கும் பின்னணியில் ஒரு கதை இருக்கும். ஒரு வீட்டில் ஒரு சக்தி இருக்கும். அவை அனைத்தையும் வாங்குபவர்கள் அறிந்தும் இருக்கலாம், அறியாமலும் இருக்கலாம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.