#SaudiArabia | வரலாற்றில் முதல் முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவு – வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ!

வரலாற்றில் முதல் முறையாக சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது.…

#SaudiArabia | Snow falls in the desert for the first time in history - Viral photos, video!

வரலாற்றில் முதல் முறையாக சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது. பனிப்பொழிவால் பாலைவன நிலப்பரப்பு வெள்ளை நிறத்தில் போர்வையாக இருந்தது. அல்-ஜவ்ஃப் பகுதியில் ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. சகாக்கா நகரம் மற்றும் துமத் அல்-ஜந்தல் கவர்னரேட் போன்ற பகுதிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை, ஆலங்கட்டி மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டு தாவரங்களுக்கு பெயர் பெற்ற நகரமான அல்-ஜவ்ஃப், இந்த அசாதாரண ஈரப்பதத்திலிருந்து பயனடையக்கூடிய லாவெண்டர் மற்றும் கிரிஸான்தமம் போன்ற பூந்தாவரங்கள் அதிகளவில் விளையும் என்று ஏராளமாக எதிர்பார்க்கிறது. தேசிய வானிலை ஆய்வு மையமும் அல்-ஜவ்ஃப் பகுதியில் மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வானிலை காரணமாக பார்வைத்திறன் குறையக்கூடும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதத்திலும் அசாதாரணமான பனிப்பொழிவு காணப்பட்டது. தபூக் நகரின் வடமேற்கே உள்ள அல்-லாஸ் மலைகளும் பனியால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.