விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறேன் – நடிகை ராஷ்மிகா!

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆவலுடன்  காத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி’திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும்…

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆவலுடன்  காத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி’திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றமும்,  நடிப்பும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. அ ர்ஜுன் ரெட்டி கதாப்பாத்திரத்தை போலவே ரசிகர்கள் தங்களின் சிகை, தோற்றங்களை மாற்றிக்கொண்டனர்.  இதையடுத்து, கீதா கோவிந்தம்,  நோட்டா,  டியர் காம்ரெட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா.

இதையும் படியுங்கள் : சிறுத்தையை புத்திசாலித்தனமாக அறையில் அடைத்து வைத்த சிறுவன் | வைரலாகும் வீடியோ!

இதையடுத்து,  ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து,  ‘டியர் காம்ரெட்’ திரைப்படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.  மேலும், ரசிகர்களிடையே இருவருக்குமான ஜோடி பொருத்தம் குறித்து அதிகம் பேசப்பட்டது. இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியது. ஆனால், இருவரும் இதுகுறித்து இதுவரை நேரடியாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

ராஷ்மிகா நடிகர்கள் அல்லு அர்ஜூன்,  கார்த்தி,  விஜய்,  ரன்பீர் கபூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய்தேவரகொண்டா குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா, “சரியான கதைக்காக இருவரும் காத்திருக்கிறோம்.  அதிக நாட்களாக எங்களது திரைப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருப்பது தெரியும்.  நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  சுவாரசியமான கதை அமைந்தால் நிச்சயமாக இருவரும் ஒன்றாக நடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.