பக்கா பிளானுடன் காய் நகர்த்தும் லோகேஷ்… மாநகரம் முதல் லியோ வரை…

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகர்களுக்குத்தான் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. அதேபோல மிகச்சிறிய அளவில் சில இசையமைப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனையும் தாண்டி இயக்குநர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது மிகக் குறைவான இயக்குநர்களுக்கு…

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகர்களுக்குத்தான் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. அதேபோல மிகச்சிறிய அளவில் சில இசையமைப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனையும் தாண்டி இயக்குநர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது மிகக் குறைவான இயக்குநர்களுக்கு மட்டுமே. அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்த இயக்குநர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் கில்லாடி என்றே சொல்லலாம்.

எந்தவித சினிமா அனுபவமும் இல்லாமல், யாரிடமும்மா உதவி இயக்குநராகக் கூட பணியாற்றாமல் குறும்படம் எடுத்த அனுபவத்தில் மட்டுமே தனது திரையுலக பயணத்தைத் துவங்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படி தமிழ் சினிமாவில் அடையாளம் தெரியாமல் வந்த ஒரு இயக்குநர் இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறியிருப்பதற்கு அவருடைய தனித்தன்மையே காரணம். ஒரே யுனிவர்ஸில் ஒன்றிற்கும் மேற்பட்ட படங்களை எடுத்து வெளியிடும் வழக்கம் ஹாலிவூட்டில் தான தொடங்கியது. உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த மார்வல் படங்களை கூறலாம். அந்த வகையில் இப்படங்கள் போலவே யுனிவர்ஸ் கான்செப்டை தன்னுடைய படங்களையும் கொண்டு வந்தார் லோகேஷ். இந்த யுனிவர்ஷ் முறையைத்தான் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் ( LCU ) ன்னு சொல்றாங்க.

கைதி படத்த விக்ரம் படத்துல கனெக்ட் பண்ணி LCU கொண்டுவந்தாரு லோகேஷ். இப்படி இருக்குற லோகேஷ் படத்துல Fight, Mass Scene, Emotionன்னு எதற்குமே குறைவு இல்லை. இன்னும் சொல்லப்போனால் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான படங்கள் வெறும் 4 படங்களே. ஆனால் முதல் படமான மாநகரத்தில் யார் இந்த இயக்குநர் என திரும்பி பார்க்க வைத்தார். முதல் படத்திலேயே அசைக்க முடியாத அடித்தளத்தைப் போட்ட லோகேஷ்க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாம் படமான கைதியில் பிரியாணி சீனியிலிருந்து கடைசி சீன் வரை தியேட்டருக்கு வரும் மக்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்தார். 3வது படமான மாஸ்டரில் விஜய், விஜய் சேதுபதி காம்போவில் ஆக்ஷன் கலந்த கதை களத்தைக் கொண்டு மிரட்டினார்.

தனது 4வது படமான விக்ரம் தமிழ் சினிமாவையே ஆச்சரியத்துக்கு உள்ளாகியது. கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை ஆடியன்ஸ்க்கு பரிசாக அளித்தார். மற்ற இயக்குநர்களுக்கு எப்படி இந்த இயக்குநர் எல்லா முன்னணி நடிகர்களையும் வைத்து படம் எடுக்க முடிகிறது என புருவம் உயர்த்த வைத்தது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. இந்த நிலையில் லியோ படத்திற்கான படப்பிடிப்பு 125 நாட்கள்  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.