மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கும் லோகேஷ் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆக்‌ஷன் கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். நான்கு திரைப்படங்கள் மட்டுமே…

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆக்‌ஷன் கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நான்கு திரைப்படங்கள் மட்டுமே இயக்கி இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ரசிகர்களின் விருப்பமான இயக்குனர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை, அண்மையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைப்பெற்றது. விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இதனால் தற்போது தளபதி 67 படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தளபதி 67 படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை முடிந்த நிலையில் தற்போது வரை ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. அதே நேரத்தில் 2005இல் ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்ற படத்தின் கதையை தழுவி தான் தளபதி 67 படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2000ஆம் ஆண்டுகளில் வெளியான படங்களில் ’ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ மிக சிறந்த
திரைப்படமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கதை, திரைக்கதை என அனைத்தும்
ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. தற்போதைய நிலையில் வன்முறைகள், ஆக்ஷன்
காட்சிகள் தான் ரசிகர்களை அதிகம் கவர்கிறது. இதனால் வயலன்ஸ் அதிகம் உள்ள
படங்களை பார்க்கவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு அதுவே விளம்பரம் என்பார்கள். அப்படி நல்ல கதையம்சம்
கொண்ட திரைப்படங்களை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் கொண்டு சேர்த்தால்
நிச்சயம் அந்த படம் வெற்றி பெறும். அந்த வகையில் தற்போது உருவாக உள்ள தளபதி 67,
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.