தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தடைகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதெற்கெல்லாம் தடை:

1. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை. இக்கட்டுப்பாட்டுடன் 23-08-2021 காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.

எதெற்கெல்லாம் அனுமதி:

1. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதி.

பொதுவான கட்டுப்பாடுகள்:

1. இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக நடத்தப்பட வேண்டும்.

2. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டால், அவைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.