முக்கியச் செய்திகள் தமிழகம்

தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு : முதலமைச்சர்

தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்தியா முழுமைக்குமான வளர்ச்சியாக இருப்பதாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணி யில் தமிழ்நாடு மாநாட்டில் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின், ஊரக தொழில் துறை சார்பில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், தொழில் துறை சார் பில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. 2 ஆயிரத்து 200 கோடி மதிப்பி லான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 41 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புவிசார் குறியீடு பெற்ற பொருட் களுக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்

Halley karthi

வாடகை பணம் தராததால் உரிமையாளர் நடத்திய தாக்குதல்!

‘வலிமை’ அப்டேட் எப்போது?

Vandhana