நாம் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்கிறோம் – நடிகை ஸ்ருதிஹாசன்

நாம் ஆணாதிக்கம் செய்யும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் சினிமாவை தனித்து பார்ப்பது நியாயமில்லை என்றும் பிரபல நடிகை  ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை…

நாம் ஆணாதிக்கம் செய்யும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் சினிமாவை தனித்து பார்ப்பது நியாயமில்லை என்றும் பிரபல நடிகை  ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இவரும் ஒன்று. பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் படம் நடித்து வருகிறார் .

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில்: சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு சினிமா துறையில் ஆணாதிக்கம் தான் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ் பெண்கள், சினிமா துறைக்கு வர தயங்குவதாக சொல்வது பற்றியும் யோசிக்க வேண்டும். ஆனால், ஆணாதிக்கம் என்பது இங்கு மட்டுமே கிடையாது. இந்த சொஸைட்டி ஆணாதிக்கத்தால் நிரம்பி உள்ளது. அதுதான் நிஜம்.

 

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கு ஆண்கள் அரசியல் செய்து வருகின்றர். பாலியல் தொந்தரவு தரும் சூழலும் உள்ளது. இதையெல்லாம் மீறித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன, என்று ஸ்ருதிஹாசன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.