சமூக வலைத்தளங்களில் பரவும் விசிகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசிகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசிகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக தொகுதி பங்கீட்டினை இறுதி செய்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விசிகவின் உத்தேச பட்டியலும் வெளியாகியிருக்கிறது.

அதில், 6 சட்டமன்ற தொகுதிகளில், செய்யூர் -பனையூர் பாபு, காட்டுமன்னார்கோவில்-சிந்தனை செல்வன், மயிலம் – பாலாஜி, திட்டக்குடி – பார்வேந்தன், புவனகிரி – எழில் கரோலின், உளுந்தூர்பேட்டை – முகமது யூசப், ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விசிக சார்பிலிருந்து இந்த பட்டியல் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முயல்கின்ற தேர்தலாக இது கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவதால், இத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.