முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

லைகர் படம் தோல்வி; நஷ்ட ஈடு கொடுக்கும் விஜய் தேவரகொண்டா

லைகர் படம் தோல்வி காரணமாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். குத்துச்சண்டை வீரரான தனது அப்பா தவற விட்ட சாம்பியன் பட்டத்தை பெற முயற்சிக்கும் மகனின் போராட்டம் தான் லைகர். விஜய் தேவரகொண்டாவுடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகமெங்கும் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் வெளியான லைகர் திரைப்படம் முதல் நாளே மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. முதல் நாள் 33.12 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்‌ஷன் அதிகார பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை குறைந்து தற்போது வரை 55 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

லைகர் திரைப்படத்தால் தன்னுடைய 60 சதவீதம் பணத்தை இழந்துள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் வராங்கல் ஸ்ரீனு தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை சார்மி கபூர் மற்றும் பிற இணைய தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போல் லைகர் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க போவதாக இயக்குநர் பூரி ஜெகந்நாத் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

G SaravanaKumar

“அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்” – செல்லூர் ராஜூ நம்பிக்கை

Halley Karthik

கோவையில் வன்முறையை ஏற்படுத்த ரவுடிகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy