மும்பையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ட்ரக்கிலிருந்து பணமழை கொட்டிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மும்பை கேட்வே சாலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ரூ.2,000 நோட்டுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த ட்ரக்கில் இருந்த பெட்டிகள் திடீரென திறந்து 2,000 ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. அந்த நேரத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் முன்னால், காற்றில் 2,000 ரூபாய் நோட்டுகள் பறந்து கொண்டிருந்தன.
இதனால் ஒட்டுமொத்த சாலையும் திருவிழா கூட்டம் போல காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் டிரக்கில் இவ்வளவு பணம் ஏற்றப்பட்டது ஏன்? என்ற கேள்விகளும், பல்வேறு கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும் இது ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம், இந்த நிகழ்விற்கு பின்னால் வேறு ஏதேனும் பின்னணி இருக்கும் என்றும் கருத்துகள் பரவி வருகின்றன.
https://twitter.com/Rajibsingha_/status/1710260676634235135
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் என்ற சலுகை விற்பனை நெருங்கும் நிலை என்பதால், பல்வேறு ஊகங்களுக்கு இந்த நிகழ்வு வித்திட்டது. இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது பற்றி பலரும் தங்களது விமரிசனங்களையும், கருத்துகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.







