இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ”வாழ்நாள் சாதனையாளர் ரத்னா விருது”

சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ்7 தமிழின், ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கும் விழாவில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் ரத்னா விருது வழங்கப்பட்டது. பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ்7 தமிழ், பல்வேறு…

சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ்7 தமிழின், ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கும் விழாவில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் ரத்னா விருது வழங்கப்பட்டது.

பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ்7 தமிழ், பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தும் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ”தமிழ் ரத்னா” விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியல், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி செய்யப்பட்டது.

Image

இதனைத்தொடர்ந்து, நியூஸ் 7 தமிழின், தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.கல்லூரி பள்ளி வளாகத்தில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சங்கமிக்கும் நிகழ்வாக நடைபெற்றது. இதில் நியூஸ்7 தமிழின் நிர்வாக இயக்குநர் வை.சுப்பிரமணியன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இயக்குநர் அமீர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளர் ரத்னா விருது இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், இசை ரத்னா விருது, மரபிசைக் கலைஞர் மணிகண்டனுக்கும், சேவை ரத்னா விருது, ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக் குமாருக்கும், தொழில் ரத்னா விருது, ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் நாகராஜனுக்கும், நம்பிக்கை நட்சத்திரம் ரத்னா விருது, லக்ஷ்மி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துராமனுக்கும், அவதார் செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் மணிக்கும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.