இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், உயிரைப் பறிக்கும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் அதிகரிக்கின்றன.
இந்தியாவில் நிகழும் பல மரணங்களுக்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தமாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு கொண்ட மக்களில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயர் இரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது எனச் சித்த மருத்துவர் அமுதா தாமோதரனிடம் கேட்ட போது, அவர் இது மாறி வரும் வாழ்வியல் முறைகளாலும், மரபு வழியாகவும் ஏற்படுகிறது என கூறினார். மேலும், தாய், தந்தையர் யாருக்காவது உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்களது பிள்ளைகளும் 40 வயதிற்கு மேல் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார். ஏனெனில் பிள்ளைகளுக்கு இந்த இரத்த அழுத்தம் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
அண்மைச் செய்தி: ‘ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
நாம் உண்ணும் உணவின் சுவையைக் கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது உப்பு. “உப்பில்லா சாப்பாடு குப்பையில்” எனும் பழமொழியும் உண்டு. ஆனால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணமும் உப்பு தான். அதற்காக உப்பே இல்லாமல் சாப்பிட வேண்டும் என்பதில்லை, உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் மருத்துவர் அமுதா. அத்துடன் சேர்த்து அதிக புளிப்பு, காரம் மற்றும் எண்ணெய்யில் செய்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கிறார்.
சேர்க்க வேண்டிய உணவுகள்:
நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக நார்ச் சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இயற்கை உணவுகளான ஷர்பகந்தா, மாதுளை பழம், வெந்தயம், சீரகம், கடுக்காய், நெல்லிக்காய் உள்ளிட்டவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.