நடிகர் விஜய் நடிக்கும் ‘The Greatest of All Time’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் அங்கு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் “நாளை சம்பவம் உறுதி” என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து ‘G.O.A.T.’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவும் வெளியானது.
இந்நிலையில், ‘The Greatest of All Time’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில், விஜய் குரலில் வெளியான இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








