அளப்பறய கிளப்புறோம்! ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின்  இசைவெளியீட்டு விழா குறித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால்,…

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின்  இசைவெளியீட்டு விழா குறித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ’டைகர் ஹுக்கும்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம்  வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை28-ம் தேதி  நடக்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில்  வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1682624081445916674?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.