“தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம்” – அன்னையர் தினத்தையொட்டி இபிஎஸ் வாழ்த்து!

அன்னையர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகத்தை போற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தையொட்டி பலரும் தங்கள் தாயிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம்.

இந்த நாளில் தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக பரிசளிப்பது, அவர்களை பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வியக்கத்தக்க வெற்றிகளை பெறுவோம்” -  ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் அறிக்கை! - News7 Tamil

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்; அர்த்தமாய் மாற்றிடும் உயிரும் மெய்யுமான
ஒப்பற்ற அன்னையின் மகத்துவத்தை போற்றுவதோடு, உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் “அன்னையர் தினம்” வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையில் “தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம்.. அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.