குழந்தையாவது மதம், ஜாதி, பாலின வேறுபாடு இல்லாமல் வளரட்டும்- மூன்றாம் பாலின தம்பதி பேட்டி

குழந்தையாவது மதம், ஜாதி, பாலின வேறுபாடு இல்லாமல் வளரட்டும் இந்தியாவில் குழந்தை பெற்ற முதல் மூன்றாம் பாலின தம்பதி தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதிகளான…

குழந்தையாவது மதம், ஜாதி, பாலின வேறுபாடு இல்லாமல் வளரட்டும் இந்தியாவில் குழந்தை பெற்ற முதல் மூன்றாம் பாலின தம்பதி தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். ஜியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். சஹத் மற்றும் ஜியா பவல் இருவரும் நம்ப முடியாத நிகழ்வை உலகிற்கு உணர்த்தி உள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோடு மாவட்டம் உம்மலத்தூரில் தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முயற்சி செய்தனர். இதில் உள்ள சட்ட சிக்கல்களை விட அவர்கள் அதிகம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்  அவர்கள் இயற்கையான கருத்தரிப்பின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். அதில் ஜியா பெண்ணாகவும், சஹத் ஆணாகவும் கருதப்பட்டு உடல் பரிசோதனைக்குப் பிறகு, இயற்கையான கர்ப்பம் சாத்தியம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இருவரும் சிகிச்சை மூலம் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்ற நிலையில் ஆணாக வாழ்ந்து வந்த சஹத்தின் மார்பகம் அறுவை சிகிச்சை மூலம் ஏற்கனவே அகற்றப்பட்டன. இதற்கு
சஹத்தின் குடும்பத்தினர், ஜியாவின் சகோதரி, கணவர் மற்றும் பல நண்பர்கள் அவர்களுக்கு கருத்தரிப்புக்கு ஆதரவாக முன் வந்தனர். இந்த நிலையில் பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று கனவு கண்ட சியா தொலைதூரக் கல்வி மூலம் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையையடுத்து ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார். இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக தரித்து வரும் மார்ச் 4-ம் தேதி குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜியா பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகப்பேறு கால புகைப்படங்களை பதிவு செய்ததோடு தங்களின் 3 ஆண்டு கனவு நிறைவேற போவதாகவும் அம்மா என்று அழைப்புக்கு காத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கோழிகோடு அரசு மருத்துவமனைக்கு வழக்கம் போல பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர்களுக்கு திடீரென குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த செய்தியை ஜியா மற்றும் சஹத்தின் நண்பரான ஆடம் ஹரி என்பவர் முகநூல் மூலம் பதிவு செய்யவே அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

ஜியா சில மலையாள  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.. தெரிவித்ததாவது..

“ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். அவர்கள் எதிர்கால வாழ்க்கையில் பாலினத்தை மாற்றிக் கொண்டாலும், அவர்களின் விருப்பத்துடன் இருப்போம். குழந்தையாவது மதம், ஜாதி, பாலின வேறுபாடு இல்லாமல் வளரட்டுமே” என கூறியுள்ளார்.

ஜியாவின் இந்த பதில் ஒட்டுமொத்த மூன்றாம் பாலின மக்களை உற்சாகத்த்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியிலும் வேதனைப்பட்டுள்ளனர் என்பதையே காட்டுவதாக நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.