உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கராஜ் நகர் பகுதியில் இரவு நேரத்தில் சாலையை கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே சாலையைக் கடந்த சிறுத்தையை வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக உதகை மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, நொண்டிமேடு, ஓல்டு ஊட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொது மக்களை கலக்கமடைய செய்துள்ளது.







