“விரைவில் #Leo #OST ” | அப்டேட் கொடுத்த அனிருத்!

லியோ திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் விரைவில் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. விக்ரம்…

“#Leo #OST coming soon” | Anirudh gave the update!

லியோ திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் விரைவில் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி முதல்நாள் வசூலிலும் படம் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கௌதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் வெளியாகி இன்றும் ஓராண்டு நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக 7  நிமிடம் நீளமுள்ள லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, “லியோ திரைப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் விரைவில் வெளியிடப்படும்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.