விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனையாவதால் ரசிகர்கள் உஷாராக இருக்க தியேட்டர் நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்த லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாகப் பட குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 18-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக கூறி மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் லியோ திரைப்படம் தொடர்பாக 18ஆம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை எனவும் , இதனை யாரும் வாங்க வேண்டாம் எனவும் அப்படி வாங்கினால் இதற்கு திரையரங்க நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் சினிப்பிரியா திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியீடு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
மதுரையில் லியோ திரைப்பட சிறப்புக் காட்சி என்ற பெயரில் போலியான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகாரில் சமூகவலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்தாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.







