லியோ திரைப்பட விவகாரத்தில் திமுக சர்வாதிகாரமாக நடக்கிறது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால் தான் அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் 52-வது ஆண்டு…

தமிழ்நாட்டில் திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால் தான் அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரம் நடக்கிறது. திரையுலகில் இருப்பவர்கள் அதனைத் தட்டிக் கேட்க வேண்டும்.  அமைதியாக இருக்கக் கூடாது.  படம் எடுத்தால் ரெட் ஜெயன்ட் கேட்க்கும் அடிமட்ட விலைக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.  சர்வாதிகாரம் திரைத்துறையில் கோலோச்சப்படுகிறது.

அத்துடன் எங்கள் ஆட்சியில் முழுமையாக காவல்துறைக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. விதவிதமான காய்ச்சல் திமுக ஆட்சியில் தான் வரும். மஞ்சள் காய்ச்சல் தக்காளி காய்ச்சல் இதெல்லாம் திமுக ஆட்சியில் தான் வந்தது. 10 மாதங்களாக சுகாதாரத்துறை தூங்குகிறதா? அமைச்சகர் மா.சுப்பிரமணியன் ஓட மட்டும் தான் செய்கிறார்.

காவிரி பிரச்னையில் கோட்டை விட்டுவிட்டார்கள் . குறுவையைப் பாதுகாத்து இருக்கலாம், எதிர்பார்த்த அளவு மானியம் கொடுக்கவில்லை.  விவசாயிகள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் அனைவரும் பாதிக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போய்விட்டனர்.  காவிரி பிரச்னையில் தமிழக அரசு உரிய முறையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.