சிறு முதலீட்டுத் திரைப்படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் டைட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நடிகர்கள் பாக்யராஜ், ராதா ரவி, ஆர்.கே.சுரேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதா ரவி, தமிழ்த் திரைப்படங்களைத் தமிழ்நாடு மக்கள்தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறினார். மேலும், மற்ற மாநிலங்களில் திரையரங்குகள் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது என்றும், கமல்ஹாசன் படம் ஓடும்போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டு விடாமல் பிள்ளைகளே பார்த்து வேண்டும் எனவும் அவர் அப்போது கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரோபோ சங்கர், ஒவ்வொரு ஊரின் பெயரிலும் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இயக்குநர் பேரரசுவை கிண்டலடித்துப் பேசிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்; போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!’
அதனை அடுத்துப் பேசிய நடிகர் பாக்யராஜ், மாற்றுத்திறனாளிகளுக்கு விதி விலக்கு அளிப்பதுபோல, சிறு முதலீட்டுத் திரைப்படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டுவந்தால், சிறு முதலீட்டுப் படங்களும் வெற்றி பெறும் எனக் கூறினார்.








