முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் விருது

பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது

குடியரசு தினத்தை முன்னிட்டு, 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு பத்ம விருதுகள் பெறும் நபர்களின் பெயர்ப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு  பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வாணி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி நிபுணர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும், பாலம் கல்யாண சுந்தரமும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலைப்பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளைக்கும், மருத்துவப் பிரிவில் மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் காலமானார்

G SaravanaKumar

நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்-பாகிஸ்தான் வெற்றி

Web Editor

வாட்ஸ் அப் Vs சிக்னல் vs டெலிகிராம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

Nandhakumar