சமூக வலைதலங்களில் லெஜண்ட் சரவணன் விரைவில் மாஸ் எண்ட்ரி!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்தப்…

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார்.

இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்தப் படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பிரபு, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற மோசலோ மோசலு என்ற பாடல் ஏற்கனவே யூ-டியூப் தளத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலை படக்குழு யூ-டியூப் தளத்தில் வெளியிட்டது. அந்தப் பாடல் வாடி வாசல் எனத் தொடங்குகிறது. இந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். பென்னி தயால், ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நடனம் ராஜு சுந்தரம் அமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது. சமூக வலைதலங்களுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்றும் விரைவில் சமூக வலைதளங்களில் அவர் மாஸ் எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என்றும் படக்குழுவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.