முக்கியச் செய்திகள் இந்தியா

8 ஆண்டுகளில் பாதியாக குறைந்த இடதுசாரி தீவிரவாதம்

மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் தீவிர இடதுசாரிகளால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பாதியாக குறைந்துள்ளன.

அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் இதனை தெரிவித்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக, இடதுசாரி தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வரும் வழிகள் அடைக்கப்பட்டன. தீவிரவாதிகளின் தலைவர்களை குறிவைத்து தேசிய பாதுகாப்புப் படை காய்களை நகர்த்தியது.

இதனால், இடதுசாரி தீவிரவாதிகளால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் கடந்த 8 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளன. இடதுசாரி தீவிரவாதம் பரவுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இடதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக தற்காப்பு உத்தியை பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை தாக்கும் உத்தியை மத்திய உள்துறை அமைச்சகம் முன்னெடுத்தது. அதோடு, இடதுசாரி தீவிரவாதிகள் பதுங்கும் யாருமற்ற இடங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மற்றும் சுக்மா ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இடதுசாரி தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அந்த பரப்பளவு தற்போது ஆயிரம்  சதுர கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

இங்கு பாதுகாப்புப் படையினர் செல்ல முடியாத இடங்களில் புதிதாக 108 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், பிகாரிலும் பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களில் 5 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக 22 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதன் மூலம், பாதுகாப்பு சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

இதேபோல், ஒடிசாவிலும் பாதுகாப்பு குறைபாடு நிலவிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மல்காங்கிரியின் சிறிய பகுதி மட்டும் இன்னும் முழுயைாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதுவும் வந்துவிடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தீவிர நடவடிக்கைகள் காரணமாக இடதுசாரி தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கில் சரணடைந்து வருவதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 978 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2014ல் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகம் என்றும் அரசு கூறியுள்ளது.

ரூ. 620 கோடியில் 250க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள்  புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் படை மற்றும் உளவுப் பிரிவை மேம்படுத்துவதற்காக ரூ. 371 கோடி ஒதக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இடதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்தவர்களின் ரூ. 22 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் காரணமாகவே இடதுசாரி தீவிரவாதம் பாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை கர்மன்

EZHILARASAN D

கொரோனா ஊரடங்கு: கோடீஸ்வரர்கள் சொத்து உயர்வு, லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!

Saravana

அடுத்த IAS லிஸ்ட் ரெடி

Web Editor