புதுப்பிக்கதக்க எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த வெங்கையா நாயுடு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூ.7.67 கோடியில் 1,482 கி.வாட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி ஆலையை இன்று தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், “புதுப்பிக்க எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது. சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி சாதனங்களை அனைத்து அரசு கட்டடங்களில் பொருத்துவதும், மழைநீர் சேகரிப்பும் கட்டமைப்பும் தேவையாகவுள்ளது. இந்த பரிசோதனை முயற்சியை மத்திய, மாநில, உள்ளாட்சித்துறையினர் கண்காணிக்க வேண்டும். இது குறித்து அதிக பிரச்சாரம் தேவை. இத்திட்டத்திற்கு அரசு மானியமும் தருகிறது.
கொரோனா காலத்தில் பல படிப்பினைகள் கிடைத்துள்ளது. அதில் முக்கியமானது சூரிய ஒளி மின்சாரத்தின் இன்றைய அவசியம். அதேபோல காற்றோட்டமான கட்டிடங்களை உருவாக்குவது. ஏனெனிலும் காற்றுக்கும், சூரிய ஒளிக்கும் இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மையுள்ளது. புதிய கட்டடங்களில் இதை செய்யவேண்டும்.” என்று குடியரசுத் துணை தலைவர் கூறியுள்ளார்.
பின்னர் பாரதியார் இல்லத்திற்கு சென்று அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.