சென்னை சேலையூரில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் மாவோ என்னும் மாணவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரி கட்டணமான ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்தில், ரூ.1லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் மீதி தொகையை கட்ட முடியவில்லை.
இதனை தொடர்ந்து தான் செலுத்திய கட்டணத்தொகையை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் கட்டணத்தொகையை திரும்ப கொடுக்க மறுத்த கல்லூரி நிர்வாகமானது மாணவரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவர் மாவோ இன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவரின் தற்கொலைக்கு சட்டக்கல்லூரி பேராசியர் நவீன் மற்றும் பதிவாளர் ஹரி பிரகாஷ் ஆகியோர் தான் காரணம் என குற்றம் சாட்டிய சக மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







