இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 392 பேர் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,509 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 1,46,950 பேர் தற்போது இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதுவரையில் மொத்த 1,07,92,19,546 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் நவம்பர் 5 வரையில் 61,39,65,751 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 8,10,783 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.







