நிலவில் உறக்கத்தில் இருக்கும் லேண்டர், ரோவரை தட்டி எழுப்ப முயற்சி – மீண்டும் சூரிய ஒளி 14 நாட்களுக்கு வருவதால் இஸ்ரோ நடவடிக்கை..!

மீண்டும் சூரிய ஒளி 14 நாட்களுக்கு வருவதால் நிலவில் உறக்கத்தில் இருக்கும் லேண்டர், ரோவரை தட்டி எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.   இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 23-ம்…

மீண்டும் சூரிய ஒளி 14 நாட்களுக்கு வருவதால் நிலவில் உறக்கத்தில் இருக்கும் லேண்டர், ரோவரை தட்டி எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 23-ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரும், பிரக்யா ரோவரும் வெற்றிகரமாக பிரிந்து சென்று, தங்களது பணிகளை சிறப்பாக செய்து வந்தது.

நிலவில் இருந்து அனுப்பிய புகைப்படங்களை அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வந்தது. பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப் மோடில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. நிலவின் தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் திட்டமிட்டபடி லேண்டர் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளது.

 

செப்டம்பர் 22-ம் தேதி சூரிய வெளிச்சம் கிடைத்ததும் ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என்று ஏற்கனவே இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்தது.  விக்ரம் லேண்டரை ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதற்கு முன் நிலவின் மேற்பரப்பில் மீண்டும் மேல் எழுப்பி இஸ்ரோ சோதித்தது. மேலும், லேண்டர் நிலவின் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்து விட்டது என தெரிவித்துள்ளது.

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டரை முப்பரிமாணத்தில் புகைப்படம் எடுத்து பிரக்யான் ரோவர் அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட அந்த பதிவில், “அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாணங்களில் பொருள் அல்லது நிலப்பரப்பின் எளிய காட்சிப்படுத்தல் ஆகும். இது மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. இந்த புகைப்படத்தை 3டியில் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகிறது” இவ்வாறு பதிவிட்டுள்ளது.

 


இந்த நிலையில் திட்டமிட்டபடி நிலவில் உள்ள லேண்டர், ரோவர் மீது இன்று சூரிய ஒளி பட தொடங்குவதால், அதனை மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபட வைப்பதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. இன்று முதல் மீண்டும் சூரிய ஓளி 14 நாட்களுக்கு வருவதால் லேண்டர், ரோவரை ஆய்வு பணிகளில் ஈடுபடுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.